மூதூர் சேனையூர் மத்தியகல்லூரியின் 62வது கல்லூரிதினத்தை முன்னிட்டு

பொன்ஆனந்தம்

திருகோணமலை மூதூர் .சேனையூர் மத்தியகல்லூரியின் 62வது கல்லூரி தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை கல்லூரி உயர்தர மாணவர்கள் ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றனர்.

இதன் ஒரு அங்கமாக இன்றுகாலை9.00மணியளவில் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரியில் இருந்து ஆரம்பமாகிஇடம்பெற்றது.

சேனையூர் கிராமத்தை பிரதான வழியாக வந்து பிள்ளையார் ஆலயதினூடக வீரபத்திரன் ஆலய விதியில் சென்று பின்னர் நாவலடி,கட்டைபறிச்சான் பிரதான வழியாக பயணித்து மீழ கல்லூரி மைதானத்தை 11.00 மணியளவில் அடைந்தது. இங்கு கல்லூரி மாணவர்கள் பழைய மாணவர்கள் பாண்ட் வாத்திய இசைகளுடன் வீதிகளை குதுகலத்துடன் அலங்கரித்தனர். இந்நிகழ்வில் பழைய மாணவரான வலயக்கல்வி கோட்டப்பணிப்பாளர் க.அம்பிகைபாகன் பழைய மாணவரும் சிரேஸ்ர ஊடகவியலாளருமான பொன் சற்சிவானந்தம் ஆகியோர் மலர்மாலை அணிவித்து கௌரவித்து வரவேற்கப்பட்டனர். . தேசியக்கொடியைஏற்றப்பட்ட பின்னர் கல்லூரி கீதம் இசைக்கப்பட்டு பின்னர் ஊர்வலம் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.; கல்லூரி அதிபர் செ.-ஸ்ரீதரன், பிரதி அதிபர் பு.சதாகரன்,பொதுச்சுகாதாரப்பரிசோதகரும் பழைய மாணவருமான தி.கோபகன் உள்ளிட்டபலர்விருந்தினர்களாக ஊர்வலத்தில்  கலந்து சிறப்பித்தனர். நேற்றைய தினம் கிறிக்கற்சுற்றுப்போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.