மட்டக்களப்பில் பெரியார் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் .

சமூக சமத்துவ உருவாக்கத்திற்கான தத்துவஞானி புரட்சியாளர் தந்தை பெரியாரின் கருத்தியலூடாக இலங்கை தமிழர்களின் எதிர்காலத்தை ஒற்றுமையாக கட்டியமைத்தலிற்கான பன்முகப்பார்வையை மையபடுத்தியதான கலந்துரையாடலானது மட்டக்களப்பு பெரியார் வாசகர் வட்ட கணேசன்திலிப்குமாரின் தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

நேற்று சனிக்கிழமை பகல் நடைபெற்ற இக் கலந்துரையாடலில், கலாநிதி எஸ்.சிவரெத்தினம், பிரான்சிலிருந்து வருகை தந்திருந்த தலித் செயற்பாட்டாளர் ஏ.தேவதாசன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.  உரைகளைத் தொடர்ந்து கருத்துப் பகிர்வுகளும் நடைபெற்றன.
இங்கு உரையாற்றிய கலாநிதி எஸ்.சிவரெத்தினம்,
பெரியாரின் புரட்சிகரமான பெரியாரிசக்கொள்கைகளை நிகழ்காலபோக்கிற்கிணங்க இலங்கை தமிழர்களின் சூழலில் தனித்துவமான கருத்தியலுடன் முன்னெடுப்பதற்கான ஆரோக்கியமானஆளுமை போக்குகளை ஆய்வியல் நோக்கில் புத்திஜுவித்துவ பார்வையூடாக ஆராய்ந்து கருத்துரைத்தனர்.
புதிய தலைமுறை இலங்கைத்தமிழ் இளைஞர்கள் மத்தியிலே இளையோடிப்போயுள்ள வலதுசாரித்துவ பழமைவாதப்போக்குகளை மாற்றியமைப்பதனூடாக இந்துத்துவ சாதிய வாதமற்ற மார்க்ஸிய பெரியாரிசக்கொள்கைகளை கட்டமைப்பதற்கான அடித்தளத்தை ஆணித்தரமாக விதைத்தனர்.
உலகமயமாதல் ஆபத்தினூடாக மதமுரண்பாடுகளுடனான அடிப்படைவாதம் வளர்ச்சியுற்று தமிழரின் யதார்த்தபூர்வமான அடையாளங்கள் பண்பாடுகள் இழக்கப்படுவதை மிகுந்த எச்சரிக்கையோடு உணர்த்தினர். இலங்கை தமிழ் பேசும் மக்களிடையே வேரூன்றியுள்ள மதம்தொடர்பான ஆபத்தை எதிர்கொள்ளுவதற்கான ஒரே கருவி பெரியாருடைய இந்துத்துவாத சாதிய பார்ப்பனிய மதவழிபாட்டெதிர்புகளை செய்வதனூடான தமிழரின் தனித்துவ கிராமிய வழிபாட்டியலை மேலோங்க செய்வதே ஒரே தீர்வென அழுத்தியுரைத்தனர் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள மதக்கலவரத்தை தடுப்பதற்கான முயலுகை பெரியாரிசக்கொள்கைகளை நமக்கேற்ற விதத்தில் ஈழத்தில் பயன்படுத்தலே என கட்டியம் கூறினார்.
தலித்சமூக மேம்பாட்டு முண்ணனியசேர்ந்த தோழர் தேவதாசன் உரையாற்றுகையில்,
பெரியார் இடதுசாரி கருத்திற்கு எதிரானவர் என்ற வாதம் இந்துத்துவ கம்மியூனிசவாதிகள் பலரால் முன்வைக்கப்பட்டாலும் பெரியார் இந்துத்துவவாத்தை மட்டுமே எதிர்த்தாரே ஒழிய பொருளாதார சமத்துவத்திற்காக கம்மியூனிச வழிநின்றே போராடியதாக கூறினார் இலங்கைத்தமிழர்களின் உரிமையியல் போராட்டம் மந்தகதியில் பயணிப்பதற்காக காரணம் இந்துத்துவ வாதிகளின் இறுக்கமான சாதிக்கட்டமைப்புகளூடான யாழ் புனிதபூமி அடையாளமே. சிவசேனா அமைப்பின் உருவாக்கம் சாதிகட்டமைப்பு இறுக்கம் ஆறுமுகநாவலரின் கட்டுக்கோப்பின் தொடர்ச்சி போன்றன இலங்கை தமிழரின் பலவீனங்களே என்றார்.
இக் கலந்துரையாடலில் பேராசிரியர் சி.மௌனகுரு, செங்கதிரோன் கொபாலகிருஸ்ணன், எழுத்தாளர் த.மலர்ச்செல்வன், ஊடகவயலாளர் பூபாலரட்ணம் சீவகன்,  எழுத்தாளர் பிரசாத் சொக்கலிங்கம், கவிஞர் ந.எஸ்தர், நூலகர் கமலினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இக் கலந்துரையாடலின்போது நூல் கண்காட்சி விற்பனையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.