71 ஆவது சுதந்திர தினத்தினை மலையகத்தில் தோட்ட மற்றும் கிராமபுற மக்களும் இன்று கொண்டாடினர்.

(க.கிஷாந்தன்)

71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல இடங்களில் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இந்த சுதந்திர தினத்தினை நகர் பகுதியில் வாழும் மக்கள் மட்டு மன்றி மலையக தோட்ட மக்கள் மற்றும் கிராம மக்களும் இணைந்து சுதந்திர தின விழா ஒன்று அட்டன் ரொத்தஸ் கொலனியில் நடைபெற்றது.

இந்த சுதந்திர கொண்டாட்டத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு நாட்டினுடைய சுதந்திரத்தினை கொண்டாடப்படுவதன் மூலம் சமூகங்களிடையே ஏற்படும் ஒற்றுமை இந்த நாட்டின் அபிவிருத்திக்கு வழிவகுக்கும் என்பதனை இதன்போது வலியுறுத்தப்பட்டன

இந்த சுதந்திர தின நிகழ்வில் அட்டன் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதகர் பிரதீப் குமார் மற்றும் சூழல் பொறுப்பு உத்தியோகத்தர் மகேஸ்வரன் உட்பட தோட்ட மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். இந்த சுதந்திர தின கொண்டாட்டங்களை ரொத்தஸ் சக்தி மன்றம் ஒழுங்கு செய்திருந்தன.