-நல்லிணக்கம் என்பது வாய்ப்பேச்சில் அல்ல செயலில்தான் தங்கியுள்ளது! – பேரின்பராஜா சபேஷ்

எமது நாடு இன மதம் மொழி மற்றும் அரசியல் என மாறுபட்ட கலாசாரங்களை கொண்டிருந்தாலும் ஒற்றுமையுடனும், சமாதானத்துடனும் நாம் எல்லோரும் வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக தங்களது கிராமம் அமைவதாக இப்பாகமுவ பிரதேச மக்கள் பெருமை கொள்கிறார்கள்.

எம்மைப்போன்று ஏனையவர்ளும் பின்பற்றினால் இனங்களுக்கிடையிலான மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்ற இலக்கை இலகுவில் எட்ட முடியும் என்ற நம்பிக்கைளுடன் இந்த கருத்தையும் எதிர்பார்பையும் குருணாகல் மாட்டத்தில் இப்பாகமுவ மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த கிராமத்தில் பௌத்தம் இந்து இஸ்ஸாம் கிறிஸ்தவம் என சகல மதத்தவர்களும் வாழ்கிறார்கள். பெரும்பான்மையாக பௌத்த சிங்கள மக்களை கொண்ட இப்பிரதேசத்தில் தமிழர்கள் சிறு தொகையினராக வாழ்ந்தாலும் யுத்த சூழலின் போது தமிழ் மக்கள் பெரும்பான்மையான சிங்களவர்களால் கசப்பான சம்பவங்கள் எதனையும் எதிர்கொள்ள வில்லை என கூறுகிறார்கள்.

அன்மைக் காலமாக நாட்டில் பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக வியாபார நிலையங்கள் தாக்குதல் பள்ளிவாசல் மீது கல்வீச்சு போன்ற வன்முறைகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் இந்த பிரதேசத்தில் முஸ்லிம்களையும் பள்ளிவாயல்களையும் எந்த வித அசம்பாவிதங்களும் நடைபெறாது பாதுகாத்தவர்கள் சிங்கள பௌத்தவர்கள் என அங்குள்ள முஸ்லிம்கள் நன்றி கூறுகிறார்கள்.

மூவின மக்களும் வாழும் இந்த பிரதேசத்தில் குறிப்பாக இனங்களுடையே ஒற்றுமையை வளப்படுத்தும் மையமாக அங்குள்ள மத வழிபாட்டு தலங்கள் விளங்குகின்றன.

நாட்டில் அண்மைக்காலமாக நடைபெற்ற இன ரீதியான சம்பவங்களுக்கு கடும் போக்கு மதகுருமார் பின்புலமாக இருப்பதாக தமிழ் முஸ்லிம் தரப்பினரின் குற்றச்சாட்டுகளாக இருக்கிறன.

சிறிய தொகையிலான பௌத்த துறவிகள் கடும் போக்குடையவர்களாக இருந்தாலும் பல பௌத்த துறவிகள் நாட்டில் நல்லிணம் ஏற்பட வேண்டும் என்பதில் ஈடுபட்டுள்ளார்கள்.

இப்பாகமுவ ரிதி விகாரை நிருவாகி வலாவித்தவெவே கசப்ப தேரர்

எமது பகுதிகளில்; அரசியல் ரீதியாக மத இன ரீதியாக பிரச்சினைகள் குறைவாகத்தான் இருக்கின்றன. சிநேகபூர்வமாகத்தான் இங்குள்ள அனைவரும் நடந்து கொள்கின்றார்கள். உதவி ஒத்தாசைகளின் நிமித்தம் பௌத்த மக்கள் பள்ளிவாசல்களுக்குப் போகிறார்கள். அவர்கள் எங்களது பன்சலைக்கும் வருகின்றார்கள். நாங்களும் அவர்களது வசிப்பிடங்களைக் கடந்து போகின்றபோது அவர்களது வீடுகளுக்குச் சென்று வருகின்றோம்.

கொடுக்கல் வாங்கல் செய்கின்றோம் அவ்வாறு எல்லாவற்றிலும் சினேகபூர்வ உறவு இருந்துகொண்டுதானிருக்கின்றது. பிரச்சினைகள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அரசியல் அல்லது பொருளாதார ரீதியாக சில சில அதிகாரங்களை, இலாபங்களைப் பெற்றுக் கொள்வதற்காக சிலர்; இனவாத பிரச்சினைகளை உருவாக்குகின்றார்கள். தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் செய்திப் பத்திரிகைகள் மூலமாக பரப்புகின்றார்கள். பொதுமக்கள் அவ்வாறல்ல. நாங்கள் பௌத்தர்கள் என்கின்ற வகையில் ஊடகங்களைச் சரியான முறையில் பிரயோகிக்க வேண்டும்.

ஊடகங்கள் வாயிலாக நல்ல விடயங்களையே மக்களுக்குக் கொடுக்க வேண்டும். சில நிகழ்வுகள், சம்பவங்கள், விடயங்கள் உண்மையாக இருந்தாலும் அந்த உண்மையைச் சொல்வதனால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றிருந்தால் அதனை பொதுவெளியில் சொல்லக் கூடாது என்று புத்த சமயப் போதனைகள் உள்ளன.

ஆனால், இந்த ஞான அறிவுரைகளைப் பறக்கணித்துவிட்டு பொது மக்களுக்கப் பாதிப்பு எற்படுத்தக் கூடிய உண்மைகள் எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால் சமூகத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது. கடந்த காலங்களில் பாரிய பிரச்சினைகள் உருவாவதற்குத் காரணமாக இருந்ததும் இவ்வாறான விடயங்கள்தான்.

உண்மையை உண்மையாகவே கூறியதால் அவ்வாறு பிரச்சினைகள் ஏற்பட்டன.

நாங்கள் ஏதாவது கருத்துக்களைச் சொல்வதாக இருந்தால் அதனால் சமூகத்துக்கு அல்லது தனி நபருக்க எதாவது பாதிப்பு எற்படும் என்றிருந்தால் அக்கருத்தைச் சொல்லாமல் விடுவதே நல்லது.

எமது பன்சாலைக்கு வருபவர்களுக்கு தேவையென்றால் தங்குமிட வசதி செய்து தரப்படும். அதற்கு எதுவித கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது. அதுதான் இங்கு விசேடமானது. அதேபோன்று இன வேறுபாடுகளின்றி சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான நிதிகளையும் வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த விகாரையைச் சுற்றிவர வாழ்கின்ற மக்களிடையே இன மத பேதங்கள் என்று எதுவுமில்லை, பொது வேலைகள், சேவைகள் அனைத்திலும் அவர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஓகஸ்ட் மாதம் நாங்கள் பெரஹர நடத்துகின்றோம் அதற்கு தமழர்கள், முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் அனைவரதும் ஆதரவு பெரிய அளவில் எங்களுக்கு கிடைத்து வருகின்றது. விழாக்கள் நடக்கின்றபொழுது தான சாலைகளைக் கூட முஸ்லிம்கள் தருகிறார்கள்.

ஏற்கெனவேயும் முஸ்லிம்கள் தான சாலைகளை ஏற்படுத்தித் தந்திருந்தார்கள்.

இத்தகைய பரஸ்பர உதவி ஒவ்வொரு சமூகத்தாரிடமிருந்தும் கிடைக்கிறது.

முஸ்லிம்கள் பள்ளியொன்றைக் கட்டிக் கொள்வதற்கு சிங்கள மக்கள் காணியொன்றை வழங்கியிருக்கின்றார்கள்.

சில சந்தர்ப்பங்களில் பன்சலையாலும் முஸ்லிம்களுக்கு காணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதற்கான கொடுப்பனவுளை அவர்கள் தந்திருக்கின்றார்கள். நாங்கள் இனமத பேதமில்லாமல் இவ்வாறு காணிகளைக் கூட தந்துதவி இருக்கின்றோம்.

இந்த பிரதேசத்தில் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் என மூன்று இனத்தவர்களும் வாழ்ந்தாலும் அங்குள்ள தமிழ் மறு;றம் முஸ்லிம் மாணவர்களுக்கு தங்களது தாய் தொழியாகிய தமிழை கற்பதற்கான வாய்ப்பு இல்லை சிங்கள மொழிப் பாடசாலைகளில் கல்வியைத் தொடருகிறார்கள் இது குறித்து தனது கவலையை வெளிப்பத்தினார் இப்பாகமுவ பார்வதிபுரத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயான எஸ்.சரஸ்வதி.

நாங்கள் தமிழர்கள் தமிழ் மொழி நன்றாக பேசுகிறோம் ஆனால் எழுத வாசிக்க தெரியாது இது பரம்பரை பரம்பரையாக நீடிக்கிறது. இந்த நிலைதான எங்கள் பிள்ளைகளுகு;கும் ஏற்பட்டுள்ளது சிங்கள மொழில் எமது பிள்ளைகள் கல்வி கற்றாலும் தமிழ் மொழில் எழுத வாசிக்கக்கூடியதாக சமூகமாக எதிர்காலத்தில் மாவேண்டும் Nவுண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பு தற்குரிய வாய்ப்பை எமது ஏற்படுத்தித் தருவது தமிழ் அரசில் தலைவர்களுக்கு பொறுப்பாகும்”

குருணாகல் -இப்பாகமுவ நாங்கிலிகும்புர ரத்ஹிமி வித்தியாயல அதிபர் ஆரியமாலா ரத்னாயக்க சிங்கள பெண் மணியாக இருந்தாலும் மாணவர்களுக்கு தாய் மொழி கற்க வேண்டும் என்ற முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்.

“எமது பாடசாலையில் சிங்கள, தமிழ், முஸ்லிம சமூகங்களைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் வரை கல்வி கற்கிறார்கள். நாங்கள் இவர்களை எந்தவித வேறுபாடுகளுமில்லாமல் சகவாழ்வுடன் நடத்துகின்றோம். எமது பாடசாலையில் கல்வி கற்றுக் கொடுக்கும் சகல ஆசிரியரக்ளும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள்

தமிழ் முஸ்லிம் மாணவர்கள வசதிகளின் நிமித்தம் இந்தப் பாடசாலையில் இணைந்து தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள்.

எந்த வித பேதங்களுமில்லாம் நாங்கள் இந்தப் பாடசாலையில் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குகின்றோம். மாணவர்களிடையே எவ்வித இன வேறுபாடுகளும் இல்லை. தமிழ் தெரிந்த ஆசிரியர்கள் இல்லாமையினால் அனைத்துப் பாடங்களையும் சிங்களத்தில் படிக்க வேண்டிய சூழல் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்றார்.

இந்தப் பிரதேசத்தில் சிங்கள தமிழ் முஸ்லிம்கள் எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்போல் வாழ்கிறோம். நாங்கள் ஒருபோதும் சிங்களமா முஸ்லிமா, தமிழா என்று பேதம் பார்த்து முரண்பாட்டை வளர்த்து வாழ்ந்ததில்லை.

கண்டி அலுத்கம சம்வங்கள் இடம்பெற்றபொழுது இப்பாகமுவ பிரதேசத்தில் வாழும் மக்களிடையே எவ்வித முரண்பாடுகளும் வர சிங்கள மக்கள் இடமளிக்க வில்லை அவர்கள்தான எங்களை காப்பாறினார்கள் என்கிறார் குருநாகல் மாவட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி மாவட்ட அமைப்பாளர். – ஏ.ஆர்.எம். வாஜித.

“இந்தப் பிரதேசத்தில் சுமார் 15 வருடங்களாக ஒரு இராணுவ முகாம் அமைக்கப்பட்டு அது இயங்கி வருகின்றது. இராணுவ தரப்பிலிருந்தும் எது வித பிரச்சினைகளும் இந்தப் பிரதேசத்திலுள்ள மக்களுக்கு ஏற்பட்டதில்லை.

அதேபோல, பன்சலை, பாடசாலை, பள்ளிவாசல், கோவில் இவற்றுக்கெல்லாம் எதுவித வேறுபாடுகளும் காட்டாது எல்லா சமூகத்தாரும் பயன்பெறும் வகையில் அபிவிருத்திகள் நடைபெறுகின்றன.

எங்களது நாங்கிலிக்கும்புர பாடசாலையில் சிங்கள மாணவர்கள் அதிகம் கற்கின்ற நிலைமையிலும் தமிழ் முஸ்லிம் மாணவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் அங்கு கற்பிக்கின்ற ஆசிரியர்கள் எந்த வித பாகுபாடுகளும் காட்டாது எல்லா சமூகத்துப் பிள்ளைகளையும் ஒரே விதத்திலே அரவணைத்துக் கற்றுக் கொடுக்கின்றார்கள். அந்தப் பாடசாலையில் ஒரு முஸ்லிம் ஆசிரியரோ தமிழ் ஆசிரியரோ கூட இல்லை”

இனங்களியே மதங்களிடையே தேசிய ந்லிலணக்கம் பற்றிய கருத்துக்கள் பல்வேறு மட்டங்களிலும் வலுப்பெற்று வருகின்ற நிலையில் சில அரசியல் வாதிகள் அரசியல் நோக்கத்திற்காக வெளியிடப்படும் கருத்துக்கள் நல்லிணக்கத்திற்கு மாறாக தொடர்ந்தும் காணப்படுகின்றன.

யுத்த சூழ்நிலையின் போது இந்த நாட்டில் பல அழிவுகள் இழப்புக்ள் ஏற்பட்டும் நல்லிணக்கம் என்பது இதுவரை எட்டாத ஒரு கனியாகவே காணப்படுகிறது.

ஆனால் சாதாரண மக்கள் வாழும் கிராமங்களில் நல்லிணக்கம் என்பது இயற்கை தந்த கொடை போல அந்த மக்கள் மத்தியில் தானாகவே கட்டியெழுப்பப்படுகிறது இந்த யதார்த்தை நல்லிணக்கம் பற்றி பேசுபவர்கள் புரிந்து இது போன்ற பிரதேசங்களை அடையளம் கண்டு அவர்களது அனுபவத்தின் அடிப்படையில் வேலைத் திட்டகளை முன்னெடுக்க வேண்டும். நல்லிணக்கம் என்பது வாய்ப்பேச்சில் அல்ல செயலில்தான் தங்கியுள்ளது!