கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மீண்டும் நிஸாம்

0
516

கிழக்கு மாகாண கல்வியமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக கடமையாற்றிய எம்.ரி.எம்.நிசாம் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராக இருந்த எம்.கே.எம்..மன்சூர் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இவருக்கான  நியமனத்தை இன்று (31) வழங்கி வைத்தார்.

மேற்படி மாகாணக் கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.ரி.எம்.நிசாம் ஏற்கனவே கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளராக கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.