கிழக்கு மாகாண முன்பிள்ளைப்பருவ பணியகத்திற்கு புதிய தவிசாளர்

கடந்த பல வருடங்களாக அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்தவரும், கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சரும், கிழக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமாக பதவி வகித்து வந்தவருமான அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எஸ்.உதுமாலெவ்வை கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் தவிசாளராக இன்றைய தினம்(31) நியமிக்கப்பட்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற வைபவத்தின்போதே இவருக்கான நியமனம் வழங்கப்பட்டது. இந்நியமனத்தை கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா வழங்கி வைத்தார்.