தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் தேசிய அரசாங்க கூட்டணியில் கைகோர்க்காது

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் தேசிய அரசாங்க கூட்டணியில் கைகோர்க்காது. நாம் எதிர்க்கட்சியாக இருந்தே எமது மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருகின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி தெரிவித்தார். தேவையான சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தை வெளியில் இருந்து ஆதரிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் நோக்கத்தில் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவர்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறான தீர்மானங்களை கையாளவுள்ளது என வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.