கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முனைக்காடு பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைத்து  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

அத்துடன் 900 ஆயிரம் லீற்றர் கோடா 46 லீற்றர் கசிப்பு காஸ்சிலின்டர் 2 உட்பட கசிப்பு உற்பத்திக்காண உபகரணங்கள் நேற்று திங்கட்கிழமை (28) மீட்கப்பட்டதாக  கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று மாலை குறித்த பிரதேசத்தை சுற்றிவளைத்து தேடுதல் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கு சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்திநிலையத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த இருசரை கைது செய்ததுடன் கசிப்பு வடிப்பதற்கு தயாராக இருந்த ; 900 ஆயிரம் லீற்றர் கோடா 46 லீற்றர் கசிப்பு காஸ்சிலின்டர் 2 உட்பட கசிப்பு உற்பத்திக்காண உபகரணங்களையும் மீட்டுள்ளர்

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இதேவேளை குறித்த பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நீண்ட நாட்களாக இடம்டிபற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது