பன்சேனை பாரி வித்தியாலயத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பன்சேனை பாரி வித்தியாலய மாணவர்களின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.
போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரத்தினை முன்னிட்டு, பிரதேச மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் இவ்வூர்வலம் நடாத்தப்பட்டது.
இதன்போது, போதையில்லா சமுகம் நல்வாழ்வை கொண்ட சமூகம், வடிசாராயத்தினை தடுத்து வளமான சமுதாயத்தை உருவாக்குவோம், வேண்டாம் வேண்டாம் போதைப்பொருள் பாவனை வேண்டாம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் மாணவர்கள் இதன்போது ஏந்தியிருந்தனர்.