தேர்தலை நடத்துங்கள்

மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்தி மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட  வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு எனவும் இந்த தீர்மானத்தை ஏற்கனவே நாம் அரச தலைவர்களுக்கு அறிவித்திருந்தோம் எனவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

 

பழைய முறைமையில் தேர்தலை நடத்த செய்யவேண்டிய சிறிய திருத்த வரைபையும் நாமே வரைந்தும் கொடுத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாணசபை தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில் அது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென வினவிய போதே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.