அதிக மழை காரணமாக படுவான்கரை வீதிகளுடனான போக்குவரத்திற்கும் தடை

நேற்றும்(13), இன்றும்(14) பெய்த அடை மழை காரணமாக மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட காலபோட்டமடு கிராமத்திற்கான காஞ்சிரங்குடா வீதியினூடான போக்குவரத்து இன்று(14) தடைப்பட்டிருந்தது.

குறித்த வீதியின், குருந்தையடிச்சேனையின் பாலத்தின் மேலாக நீர் பாய்ந்தமையினால் இவ்வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. அதுபோல மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட பல உள்ளுர் கிறவல் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்ததுடன், கொக்கட்டிச்சோலை மைதானமும் நீர்நிரம்பி காணப்பட்டது. அதேபோன்று சில இடங்களில் வீடுகளைச்சுற்றிய காணிகளிலும் நீர் நிரம்பியிருந்தன.