மட்டக்களப்பில் அடைமழைபொங்கல் வியாபாரம் வியாபாரிகள் கவலை

0
519
மட்டக்களப்பில் இரு நாட்களாக பெய்து வரும் அடைமழையானது தைப் பொங்கல் வருடப்பிறப்பிற்கான அனைத்துவித வியாபார நடவடிக்கைகளையும் கொள்வனவு நடவடிக்கைகளையும் ஸ்தம்பிதம் அடையவத்துள்ளது
இரண்டு நாட்களாக மாட்டக்களப்பில்  தொடர்ச்சியாக பெய்த அடைமழை காரணமாக புடவை வியாபாரம் தொடக்கம் வாழைப்பழ வியாபாரம் வரை அனைத்து வியாபாரத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் சுதந்திரமாக வந்து பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத படி மழையானது மக்கள் மனங்களில் உற்சாகமின்மையையும் இடைஞ்சலையும் ஏற்படுத்தியுள்ளது. அது மாத்திரமின்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாதபடி வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளது.
 வியாபாரிகள் தைப்பொங்கல் வருடத்திற்கென விசேடமாக கொள்வனவு செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் தேக்க நிலையில் காணப்படவதாக அவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக சொல்லப்போனால் வியாபாரிகள் ஆர்வத்துடன் வியாபாரத்தில் ஈடுபட முடியாத நிலையையும்  மக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட முடியாத  நிலையினையும் அவதானிக்க கூடியதாக இருந்தது…