கிழக்கு ஆளுநருக்கு எதிராக கையெழுத்துவேட்டை கருணா அதிரடி

0
1798
(டினேஸ்)
இன வாதத்தை ஏற்படுத்தும் ஆளுநருக்கு எதிராக கிழக்கு மக்கள் ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் எனும் நோக்கில் கையெழுத்து வேட்டைக்கான அழைப்பு விடுக்கின்றனர் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினர்

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று 13 மட்டக்களப்பு நாவற்குடா சணிபிஸ் விடுதியில் அதன் செயலாளர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே கட்சியின் தலைவரும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்தார்.
மேலும் இது தொடர்பாக கூறுகையில் கிழக்கு மாகாணத்திற்கு தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் ஆளுநர் ஒரு இனத்துவேசம் கொண்ட நபர் அவர் கூறியிருக்கின்றார் நான் ஓட்டமாவடியில் உள்ள இந்து ஆலயத்தை இடித்துள்ளேன் நீதவானை மாற்றியுள்ளேன் கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என பல இனவாத கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
இப்படியான ஒரு நபருக்கு கிழக்கு மாகாணத்தை ஆளக்கொடுப்பதா எமது மக்களது எதிர்ப்பினை நாம் பெரிய அளவில் செய்யவேண்டும் அந்தவகையில் எதிர்வரும் 18.01.2019 ஆம் திகதி காந்தி பூங்காவில் கிழக்கு மாகாண ஆளுநருக்கான எதிர்ப்பு கையெழுத்து வேட்டை ஒன்றிணை ஏற்பாடு செய்துள்ளோம்.
அந்த வகையில் இவ்விடையத்தை கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றுணைந்து எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் அத்துடன் இச்செயற்பாடு எமது கட்சியின் தலைமையில் ஏற்பாடு செய்யப்படும் என்பதனால் கட்சியின் சகல அங்கத்தவர்களும் அமைப்பாளர்களும் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்தார்.
இம்மத்திய குழுக்கூட்டத்தில் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் எஸ்.வசந்தகுமார் பொருளாளர் எம்.உதயகுமார் மற்றும் இளைஞர் அணித்தலைவர் ஊடக  பேச்சாளர் என கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.