கால்நடைகள் சாவு விவசாயிகள் அதிர்ச்சி

(மூதூர்நிருபர்)
திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களிலும் கால்நடைகள் திடிர் இறக்க விவசாயிகள் அதிர்சியடைந்துள்ளனர். இதனால் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கால்நடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மூதூர் பிரதேசத்தின் பின்தங்கிய பல கிராமங்களிலும் ஆடு மற்றும் மாடுகள் இறந்துள்ளதாக கால்நடை வளர்போர்முறையிட்டுள்ளனர்.
பின்தங்கிய கிராமங்களான பள்ளிக்குடியிருப்பு இத்திகுளம்,சின்னக்குளம், போன்ற அதிகம் கால்நடை வளர்க்கும் இடங்களில் இவ்வாறான திடிர் இறப்புக்கள் சம்வத்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேற்குறித்த கிராமங்களில் எருமை மாட்டு இனம், ஆடுகள் என்பனவும் இறந்துள்ளது. இதனால் பல லட்சம் நஸ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை இதனை உறுதிப்படுத்திய பிரதேச சபை இது தொடர்பான வைத்திய பரிசோதனைகளை கால்நடைவைத்தியத்திணைக்களம் மேற்கொண்டுள்ளதால் தற்காலிகமாக மாடுகளை உணவுக்கு அறுப்பதனை தடை செய்துள்ளதாகவும் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் அருஸ் அறிவித்துள்ளார்.

வைத்திய அறிக்கைள் வரும் வரை இத்தடை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவிதமான பாதிப்பு கிண்ணியாப்பிரிவிலும் கடந்த வாரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட காலநிலை மாற்றம்காரணமாக இவ்விடயம் ஏற்பட்டிருக்கலாம் என விவசாயிகள்  நம்புகின்றனர்.