மட்டக்களப்பு நகரில் ஹோமியோபதி வைத்தியசாலை

 

சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் கீழ் மட்டக்களப்பு நகரில் ஹோமியோபதி வைத்தியசாலை ஒன்று இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரணவணபவன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு இவ் வைத்தியசலையைத்திறந்து வைத்தார்.

கௌரவ அதிதியாக பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், சிறப்பு அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் மா.தயாபரனும், அத்துடன், மாநகரை ஆணையாளர் கா.சித்திரவேல், பிரதி ஆணையாளர் ந.தனஞ்சயன், பாலமுனை ஹோமியோபதி வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர் பி.பிரவீனா, மாநகர சபைக்கணக்காளர் திருமதி ஜீ.ஹெலன் சிவராஜா, நிருவாக உத்தியோகத்தர் திருமதி ரோகினி விக்கேஸவரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு பிரதான பஸ்த் தரிப்பிடத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள இவ் ஹோமியோபதி வைத்தியசாலையில் இலவசமாக மருத்துவ வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், வைததிய ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என இவ் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி எம்.ஏ.எம்முனீர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஹோமியோபதி அரச வைத்தியசாலையானது இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள 8ஆவது வைத்தியசாலையாகும்.

ஹோமியோபதி வைத்தியசாலைகள் வெலிசறையில் முதன் முததலாக அமைக்கப்பட்டது. அதனையடுதது தெகிவளை, மாத்தளை, வரக்கதாபொல, பாலமுனை இங்கிரிய குருநாகல் ஆகிய இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.