மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான சமுக வலைத்தள பாதுகாப்பு தொடர்பிலான கருத்தரங்கு இன்று(29) சனிக்கிழமை, பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தேசிய இளைஞர்சேவை மன்றத்தின் அனுசரணையில் மண்முனை தென்மேற்கு இளைஞர்சேவை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட குறித்த கருத்தரங்கில், பிரதேசத்திற்குட்பட்ட இளைஞர், யுவதிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சமுகவலைத்தளங்களை பயன்படுத்துவது தொடர்பிலும், சமுகவலைத்தளங்களை பயன்படுத்துவதினால் ஏற்படக்கூடிய நன்மை, தீமை தொடர்பிலும், சமுகவலைத்தளங்களிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ளுதல், சமுகவலைத்தளங்களினால் ஏற்படும் பிரச்சினைகளை சட்டரீதியாக எவ்வாறு தீர்ப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.
சமுகவலைத்தளங்களினால் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகளை தீர்க்கும் வகையில், இக்கருத்தரங்கு நடாத்தப்பட்டது.
இளைஞர்சேவை உத்தியோகத்தர் அ.தயாசீலன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், கலந்துகொண்ட இளைஞர், யுவதிகளுக்கு கையேடுகளும் வழங்கப்பட்டன.