முன்னாள் எம்பியை மூன்றரை மணித்தியாலங்கள் விசாரித்த குற்றப்புலனாய்வினர்

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தன்னிடம் விசாரணை செய்தாக த.தே.கூ. மு.நா.உ.அரியநேத்திரன் தெரிவித்தார்.
வவுணதீவுக் கொலைச் சம்பவத்திற்குப் பின்னர் முன்னாள் போராளிகள் விசாரிக்கப் படுகின்றார்கள் இவற்றை ஏற்றுக் கொள்ள முடிததாகும். அதற்காக வேண்டி கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், அவர்கள் கண்டுபிடிக்கவேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்களும் இல்லை. எனவே வவுணதீவுச் சம்பவத்தை வைத்து முன்னாள் போராளிகள் மீது விசாரணைகளை மேற்கொள்வது என்பது எற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கின்றது.
என  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (28) மாலை அம்பிளாந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு வந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் என்னைத் தொலைபேசியில் அழைத்து மட்டக்களக்களப்பிலே உள்ள வீடொன்றில் வைத்து என்னை கடந்த 22 ஆம் திகதி அழைத்து விசாரித்தனர். அவ்விசாரணை மூன்றரை மணித்தியாலங்கள் வரை இடம்பெற்றிருந்தது.
இவ்வருடம் மாவீரர் தினம் நடைபெற்ற நாளுக்கு முதல் நாள் எங்கு நின்றது, மாவீரர் தினத்தில எங்கு நின்றது, மாவீரர் தினத்திற்குப் பிறகு நான் எங்கு சென்றது எனவும் விசாரித்தார்கள். மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம் செய்தது, மாவீர் தினத்தில் கலந்து கொண்டது போன்ற விடையங்களை நாம் அவர்களிடம் தெரிவித்தேன்.
கொழும்பில் அழைத்து விசாரணை நடாத்துவதற்கு தங்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைத்துக் கொள்வதற்காகவே நாம் மட்டக்களப்புக்கு வந்து தங்களிடம் விசாரணையை மேற்கொள்கின்றோம் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
வவுணதீவில் வைத்து பொலிசாரைக் சுட்டுக் கொன்றவர்கள் கண்டுபிடித்து சட்டத்தின் முன்னால் நிறுத்த வேண்டும் இதற்கு எந்தவித ஆட்சேபனைகளும் இல்லை. ஆனால் அக்கொலைச் சம்பவத்தை மாவிரர் தினத்திற்கு முடிச்சுப் போடுவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். என அவர் மேலும் தெரிவித்தார்.
என்னை விசாரிப்பதற்கு முன்னர் படுவாங்கரைப் பகுதியிலுள்ள பல முன்னர் போராளிகளிடமும், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடாத்தியுள்ளனர். புணர்வாழ்வு பெற்ற மன்னாள் போராளிகள் தற்போது இயல்பு வாழ்வுக்கத் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தின் நிதிர்த்தம் பல சிரமங்களுக்கு மத்தியில் அவர்கள் பலவித தொழில்களை செய்து வருகின்றார்கள். இந்நிலையில் அவர்களின் அடையாள அட்டைகளைப் பார்ப்பது, விசாரணை நடாத்தவது என்பன வவுணதீவுச் சம்பவத்திற்குப் பின்னர் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறான நிலமையை ஏற்றுக் கொள்ள முடியாத தாகும். அதற்காக வேண்டி கொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், அவர்கள் கண்டுபிடிக்கவேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்களும் இல்லை. எனவே வவுணதீவுச் சம்பவத்தை வைத்து முன்னாள் போராளிகள் மீது விசாரணைகளை மேற்கொள்வது என்பது எற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.