மட்டக்களப்பு டெனிஸ் கழக சவால் கிண்ண சமர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் டெனிஸ் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில்  டெனிஸ் சமர்  ஒன்று  மட்டக்களப்பு டெனிஸ் பயிற்சிக் கழக மைதானத்தில் எதிர்வரும் 27ம் திகதி நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு டெனிஸ் கழகம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பழைய மாணவர்களினது சவால் கிண்ண சமரானது30 வயதிற்கு மேல்,  30 வயதிற்கு கீழ் ஆகிய இரண்டு குழுப் போட்டிகளாக இப் போட்டிகளாக நடைபெறவுள்ளன.
நாளை 27ஆம் திகதி காலை 07.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டிகளில் 30 வயதிற்கு மேற்பட்ட டெனிஸ் குழுவின் தலைவராக பகீரதனும் 30 வயதிற்கு கீழான டெனிஸ் குழுவின் தலைவராக கழகத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர் தினேஷ்குமாரும் தலைமை தாங்கவிருக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட டெனிஸ் வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டு இவ்விரு அணிகளுக்கும் தங்கள் ஆதரவைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து எதிர்வரும் 28ம் திகதி மாலை 05.30 மணிக்கு மட்டக்களப்பு டெனிஸ் கழகத்தினால் வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் டெனிஸ் வீரர்களுக்கும் பழைய டெனிஸ் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான ஒன்றுகூடல் நிகழ்வொன்றும்  ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்றும் மட்டக்களப்பு டெனிஸ் கழகம் தெரிவித்துள்ளது.