காரைதீவில் கடலுக்குள் சென்று சுனாமி வழிபாடு!

0
555

காரைதீவு மீனவர்சமுகமும் இந்துசமய விருத்திச்சங்கமும் இணைந்து
ஏற்பாடுசெய்த 14வருட சுனாமி நினைவுதின நிகழ்ச்சி காரைதீவு கடற்கரையில்
(26) புதன்கிழமை காலை இடம்பெற்றது. முதலில் கடற்கரையிலுள்ள
நினைவுத்தூபி முன்றலில் சுனாமிச்சுடர்கள் ஏற்றப்பட்டு விசேடபூஜை
நிகழ்த்தப்பட்டு பின்னர் கடலுக்குள் சென்று சுனாமி புஸ்பாஞ்சலி
நிகழ்த்தப்பட்டது. கரையில் நின்றோர் கடற்றகரையில் மலர் அஞ்சலி செலுத்தி
வழிபட்டனர். காரைதீவ பிரதேச செயலாளர் வெ.ஜெகதீசன் தவிசாளர் கி.ஜெயசிறில்
உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டார்கள். ஆலயபிரதமகுருக்களான சிவஸ்ரீ சண்முக
மகேஸ்வரக்குருக்கள் சிவஸ்ரீ மகேஸ்வரக்குருக்கள் சிவஸ்ரீ சாந்தருபன் ஜயா
ஆகியோர் ஆத்மார்த்த பூஜைகளை நடாத்தினர். பெருந்திரளான காரைதீவு மக்கள்
கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவதைக்காணலாம்.