உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் .

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த மாத இறுதிப்பகுதிக்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் இம்மாதம் 26 ஆம் திகதி வெளியிடக் கூடியதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. பெறுபேறுகளை மீளாய்வு செய்யும் பணிகள் தற்போது இடம்பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறினார்.