கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்துக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பொறுப்புகூற வேண்டும்.

(க. விஜயரெத்தினம்)  சட்ட விதிகளுக்கும், சட்ட நியாதிக்கங்களுக்கும் முரனாக நியமிப்பு செய்யப்பட்டு, மனித உரிமை மீறல்களை கல்விப்புலத்தில் அரங்கேற்றும் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரின் செயற்பாடுகளை சங்கம் வண்மையாக கண்டிப்பதோடு இச்செயற்பாடுகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பொறுப்புக்கூறல் வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் முன்வைத்துள்ளது.

பொது உள்நாட்டு அலுவலக அமைச்சின் சுற்றறிக்கையின் படி அதிகாரிகளை சந்திக்கும் நாளாகிய புதன் கிழமை கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் மறுப்புத் தெரிவித்தை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் வெள்ளிக்கிழமை (21) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது –

கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற சட்ட விதிகளுக்கும், தாபன விதிக்கோவைகளுக்கும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் அதிவிசேட வர்த்தமானி பத்திரிகையின் பணிப்புரைகளுக்கு முரனாகவும்,நடைபெற்ற ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் இலங்கை ஆசிரியர் சங்கத்தினை மறுத்துள்ளமை இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியல் அமைப்பின் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தொழிற்சங்க உரிமையினை மீறும் செயலாகும்.

பொது உள்நாட்டு அலுவலக அமைச்சின் சுற்றறிக்கையின் படி அதிகாரிகளை சந்திக்கும் நாளாகிய புதன் கிழமை சந்திப்பதற்கு மறுத்துள்ளதோடு பொலிஸாருக்கு அறிவித்து மாகாணக் கல்விப் பணிமனைக்குள் அச்சுறுத்தல்களை சங்கத்தின் செயலாளர் மீது மேற்கொண்டதோடு, பொலிஸாரின் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டமை வினைத்திறனற்ற நிர்வாக செயற்பாடு என குற்றம் சாட்டியுள்ளார் இச்செயற்பாடானது கடந்த கால அரசின் அடாவடித்தனத்தை நினைவூட்டுகிறது.

மேற்படி மாகாண கல்விப்பளாரின் அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பான பல்வேறு விசாரனைகள் நடைபெற்றிருப்பதோடு வினைத்திரனற்ற நிர்வாக செயற்பாடு தொடர்பாக கவனயீர்ப்பு போராட்டங்களும் நடைபெற்றிருப்பதோடு, தண்டனையும் வழங்கப்பட்டிருந்த வேளை மாகாண ஆளுனரால் சட்டவிதிகளுக்கு முரனாக நியமிப்பு செய்யப்பட்டிருந்தமையை சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

இடமாற்ற சபையின் அங்கிகாரமின்றி பல ஆசிரியர்களுக்கு இடமாற்றத்தினை தன்னிச்சியாக வழங்கியிருப்பட்டதோடு தொலைபேசி அழைப்புகளுக்கு வெளிப்படைத் தன்மையாக பொறுப்பு கூறுவதில்லை. இவ் இடமாற்றங்கள் மூலம் வினைத்திறனுள்ள பல மனிதவளங்கள் வீண்விரயம் செய்யப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இவ் இடமாற்றத்தில் இறந்துபோன ஆசிரியர்களும், வலது குறைந்தவர்களும் உள்ளடக்கியிருப்பது கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகளின் வினைத்திறனற்ற செயற்பாடுகளாகும். கடந்த காலங்களில் பரீட்சை வினாத்தாள்கள் குளறு படிகளாக அமைந்திருந்ததை சங்கம் பல்வேறான ஊடகங்களின் ஊடாக அம்பலப்படுத்தி இருந்தது.

வடகிழக்கு கல்வி பின்னிடைவாகயிருப்பதோடு, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்ட கல்வி நிலையானது மிக மோசமான நிலையை அடைந்திருப்பதோடு, கல்விப்புலத்தில் மாகாண மட்டத்தில் நடைபெறும் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள் மேலும் கல்வியினை பின்னிடைவிக்கு இட்டுச்செல்லும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.