கிழக்கின் ஸ்கூட்டி வடக்கில் கரை ஒதுங்கியுள்ளது.

முல்லைத்தீவு கடற்பகுதியில் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று (19) காலை கரை ஒதுங்கியுள்ளது.

முள்ளிவாய்க்கால் பகுதி கடற்கரையில் குறித்த ஸ்கூட்டி கரை ஒதுங்கியுள்ளது. கிழக்கு மாகாண பதிவில் காணப்படும் குறித்த மோட்டார் சைக்கிள் முற்றாக பழுதடைந்து துருப்பிடித்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

மோட்டார் சைக்கிள் கரை ஒதுங்கியமை தொடர்பில் அப்பகுதி மக்கள் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை நேற்று (18) முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரை பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் இரண்டு புலிக்கொடிகள் கரையொதுங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.