நிதி அமைச்சு மங்களவுக்கு ரவிக்கு பெற்றோலியம்

நிதி அமைச்சர் நியமனம் தொடர்பில நிலவிய வந்த குழப்ப நிலை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிதி அமைச்சைப் பொறுப்பேற்றுக்கொள்வதில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு இடையில் இருந்த போட்டி நிலை தற்போது தணிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பெற்றோலிய  அமைச்சை பொறுப்பேற்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சராக மங்கள சமரவீர பதவியேற்கவுள்ளதுடன், அமைச்சரவையின் 20 உறுப்பினர்கள் நாளை பதவியேற்கவுள்ளனர்.

மேலும், இது தொடர்பில் அடுத்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன