மூதூர் பிரதேசத்தில் யானை வேலி அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

பொன்ஆனந்தம்
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர்பிரிவில் உள்ள மீழ்குடியேற்றக்கிராமமான இரால்குழி,நாவலடி கிராம மக்கள் இன்று காலை 10.00 மணியளவில் யானைவேலி அமைத்து தமது கிராமத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஆர்பாட்டமொன்றை நடாத்தினர்.
மேற்படி கிராமத்தில் தொடர்ற்சியாக யானையால் தாம் பாதிக்கப்படுவதாகவும் அதுதொடர்பாக எந்தவித நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லையெனவும்  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்
இரால்குழி நெடுஞ்சாலையில் ஆரம்பமான  ஆர்பாட்டப்பேரணி மூதூர் பிரதேச செயலகம் வரை வந்து நிறைவடைந்தது.
முடிவில் பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மகஜர் பிரதிதிட்டமிடல் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டன.
இங்கு கலந்துகொண்ட மக்கள் 10வருடங்களுக்குமேலாக மீழக்குடியமர்த்தப்பட்டபோதும் இன்னும் காணி ஆவணமுள்ளிட்ட பல தேவைகள் நிறைவேற்றப்படாமலும் உள்ளதாகவும் முறையிட்டனர்.