மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு மீனவர்கள் பாதிப்பு

0
515
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பு  காணப்படுவதாகவும் இவ்வாறு வழமைக்கு மாறா வகையில் ஏற்பட்டுள்ள கடல் கொத்தளிப்பின் காரணமாக  ஆழ்கடல் மீன்பிடி, கரைவலை மீன்பிடி ஆகியவற்றிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
சுமார் நான்கு நாட்களாக கடலையானத பாரிய அளவில்  ஏற்படுவதனால் கரையை அண்மித்ததாக  நிறுத்தி வைக்கப்ட்டடிருந்த  தோணிகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் சற்று தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இக் கொந்தளிப்பானது சற்று கூடுமாயின் அனைத்து மீன்பிடி உபகரணங்களுக்கான பாதகாப்பினை விஸ்தரிக்க வேண்டிய நிலையேற்படும் என மீனவரகள் மேலும் தெரிவித்தனர்……பழுகாமம் நிருபர்