வவுணதீவு பொலிஸாரின் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு, வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமைகைக் கண்டித்தும் அவர்களின் படுகொலைக்கு நிதியான விசாரணைகளைக் கோரியும், மட்டக்களப்பில் இன்று (15) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில், காந்திபூங்காவில் முன்னெடுக்கப்பட்டது.

”துப்பாக்கிக் கலாசாரம் வேண்டாம்”, “பயங்கரவாத அடக்குமுறை வேண்டாம்”, “கொலைகளைத் தடுப்போம் – அநீதிகளை வெறுப்போம்” என்னும் கோஷத்துடன் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான நவரெட்னராஜா, கட்சியின் பொதுச் செயலாளர் வி.கமலதாஸ், ஊடகப் பேச்சாளரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான எஸ்.வசந்தகுமார் உட்பட கட்சி ஆதரவாளர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நாட்டில் மீண்டும் பயங்கரமான சூழ்நிலையொன்று ஏற்படுவதை யாரும் அனுமதிக்கக்கூடாது என, இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.