புதிதாக மண் அகழ அனுமதி : மக்கள் குழப்பம்

பொன்ஆனந்தம்
திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர்பிரிவில் உள்ள கங்கை கழிமுகப்பகுதியில் மண்ணகழ புதிதாக அனுமதிவழங்கப்பட்டதனால் பிரதேச மக்கள் மத்தியில் குளப்பநிலை எற்பட்டது.

நேற்றய தினம் இரால்குழி கிராமசேவகர்பிரிவில் உள்ள மேற்படி பிரிவில் மண்கழ அனுமிதியழிக்கப்பட்ட பிரிவினர் கனரக வாகனங்களுடன் குறித்த கங்கையும் கடலும் சங்கமிக்கும் கழிமுகப்பகுதிக்கு மண்ணகழ வந்தனர்.
இதனையறிந்த நாலடி,ரால்குழி பிரதேச பொது அமைப்புக்கள் தமது ஆட்சேபனையை வெளியட்டதுடன் அதிகாரிகளின ;கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

குறித்த பிரதேசத்திற்கு வந்த அதிகாரிகளிடம் குறித்த கடல் மற்றும் கங்கைப்பகுதி ஏலவே கடல்அரிப்;பிற்குட்பட்ட இடமாகவுள்ளதனைச்சுட்டிக்காட்டியதுடன் தமது எதிர்ப்பையும் வெளியட்டனர்.

இங்குள்ள மூவின மீனவர்களும் இதன்போது பிரசன்னமாகி விளக்கமளித்தனர். இந்நிலையில் அங்கு வந்தபிரதேச செயலக அதிகாரிகள் இதற்கான அனுமதி பிரதேச செயலக மட்டத்தில் வழங்கப்படவில்லை. என்பதனைவிளக்கியதுடன் தாம் உயர்மட்ட அதிகாரிகளின்கவனத்திற்கும் கொண்டுவருவதாக பொது அமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்தனர். ஆயினும் இதற்கான அனுமதி உயர்மட்டத்தில் பெறப்பட்டதனால் அகழ்வு ஆரம்பிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் தெரிவித்தனர்.இப்பகுதியில் மண்ணகழ்வு முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டது.