யோகேஸ்வரன் எம்.பியால் ஆலய மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டல்

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கம்பரலிய வேலைத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனினால் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் 250 இலட்சம் ரூபா நிதியில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் வீதி புரமைப்புக்கு 100 இலட்சம் ரூபாவும், பாடசாலை மைதானங்கள் புனரமைக்க 50 இலட்சம் ரூபாவும், ஆலயங்கள் புனரமைக்க 100 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் வாலமன்கேணி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட ஐந்து இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஆலய சுற்றுமதில் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன்;, ஆலய நிருவாகத்தினர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர். மீதி நிதி மூலம் ஆலய புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றது.

அத்தோடு வாகரை புளியங்கண்டடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட ஐந்து இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஆலய மகா மண்டபம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் ஆலய நிருவாகத்தினர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.