போதைப்பொருள் குற்றவாளிகளிற்கு மரணதண்டனை

போதைப்பொருள் கடத்தலிற்காக தண்டனை வழங்கப்பட்ட பின்னரும் தொடர்ந்தும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரணதண்டனை வழங்க வேண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.

மரணதண்டனை கைதிகள் குறித்த விபரங்கள் தனக்கு கிடைக்காததன் காரணமாக மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது தாமதமாகின்றது என சிறிசேன தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தலிற்காக எந்த தனிநபரும் சட்டத்தினை பலவீனப்படுத்தக்கூடாது என குறிப்பிட்டுள்ள சிறிசேன சட்டங்களை எந்த இடைவெளியும் இல்லாமல் நடைமுறைப்படுத்தவேண்டியது முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.

 

போதைப்பொருள் குற்றங்களிற்காக தண்டனை வழங்கப்பட்டநிலையிலும் தொடர்ந்தும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்ற சிறிசேனவின் கருத்து முன்னர் கடும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்த நிலையிலேயே அவர் மீண்டும் அதேகருத்தை வெளியிட்டுள்ளார்.