மட்டக்களப்பு உணவகங்களின் அனுமதிகள் இரத்தாகும்

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சி, டி சான்றிதழ்களைப்பெற்ற உணவகங்கள் ஏ, பி சான்றிதழ்களை ஒருமாத காலத்துக்குள் பெற்றுக்கொள்ளாது விட்டால், அந்த உணவகங்களின் அனுமதிகள் இரத்துச் செய்யப்படும் என, மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

அதனடிப்படையில், 42 உணவகங்கள் தங்களது சுகாதார நிலைமைகள் தொடர்பில், விரைவில் உறுதிப்படுத்த வேண்டுமென்றும், வழங்கப்பட்ட சான்றிதழ்களை உணவகங்களில் காட்சிப்படுத்த வேண்டும்மென்றும், அவ்வாறு காட்சிப்படுத்தப்படாதுள்ள உணவகங்களின் அனுமதிகள் இரத்துச் செய்யப்படும் எனவும், அவர் எச்சரித்தார்.