இம்மாதத்தில் 3 முதலாந்தர உயர்கல்வி அதிகாரிகள் ஓய்வு!

கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த முதலாந்தர கல்வி நிருவாகசேவை அதிகாரிகள் இம்மாதம் ஓய்வில் செல்லவிருக்கின்றனர்.
 
இலங்கை கல்வி நிருவாகசேவையின் முதலாந்தர அதிகாரிகளான கிழக்கு மாகாண மேலதிகமாகாணக்கல்விப்பணிப்பாளர் சின்னத்தம்பி மனோகரன் மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் கணபதிப்பிள்ளை பாஸ்கரன் பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் இரத்னம் சுகிர்தராஜன் ஆகியோரே இம்மாதம் ஓய்வில் செல்லவிருக்கின்றனர். 
 
 
கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தில் மேலதிகமாகாணக்கல்விப்பணிப்பாளராக கடந்த 8வருடங்கள் கடமையாற்றிய சின்னத்தம்பி மனோகரன் இன்று திங்கட்கிழமை  தனது 60வது வயதில் ஓய்வுபெறுகிறார்.
 
செட்டிபாளையத்தைச்சேர்ந்த இவர் தனது மொத்த 34வருட அரச கல்விச்சேவையில் 19வருடங்கள் கல்விநிருவாகசேவையிலும் 15வருடங்கள் ஆசிரியசேவையிலும் அளப்பரிய பணியாற்றியுள்ளார்.
 
மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் கணபதிப்பிள்ளை பாஸ்கரன் எதிர்வரும் 5ஆம் திகதி புதன்கிழமை தனது 60வயதில் ஓய்வுபெறுகிறார்.
 
களுதாவளையைச் சேர்ந்த அவர் 39வருடகாலம் கல்விச்சேவையாற்றியுள்ளார்.1979இல் மட்.கல்லடி சிவானந்தாவில் உடற்கல்விஆசிரியராக முதல்நியமனம்பெற்றவர். 18வருடங்கள் கல்விநிருவாகசேவையிலும் 21வருடங்கள் ஆசிரியசேவையிலும் பணியாற்றியுள்ளார்.
 
பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் இரத்னம் சுகிர்தராஜன் எதிர்வரும் 9ஆம் திகதி தனது 60வயதில் ஓய்வுபெறுகிறார்.
 
பொத்துவிலில் பிறந்து கல்முனையில் வாழும் அவர் 34வருடகாலம் கல்விச்சேவையாற்றியுள்ளார். 19வருடங்கள் கல்விநிருவாகசேவையிலும் 15வருடங்கள் ஆசிரியசேவையிலும் பணியாற்றியுள்ளார்.