க.பொ.த. சா.தரப்பரீட்சை வரலாற்றில் இன்று முதல் புதிய நடைமுறை! வாசித்துவிளங்குவதற்கு 10நிமிடங்கள் நேர ஒதுக்கீடு!

கடந்த க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் 3மணித்தியால இரண்டாம் பத்திரத்தை வாசித்துவிளங்குவதற்காக முதன்முதலாக ஒதுக்கப்பட்ட பத்துநிமிடநேர வாசிப்பு நேரம் இம்முறை முதன்முதலாக சா.த.பரீட்சைக்கும் அறிமுகப்படுத்தப்படும்.இங்கும் இரண்டாம் பத்திரத்திற்கு மாத்திரமே 10நிமிடம் வழங்கப்படும்.
 
 
என்று  நடைபெறவிருக்கும் க.பொ.த.சா.த.பரீட்சை தொடர்பில் விளக்கமளித்த இலங்கைப்பரீட்சைகள் திணைக்கள உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்:
 
 
இன்று திங்கட்கிழமை 3ஆம் திகதி முதல் நடைபெறவிருக்கும்  சா.தர பரீட்சைகளுக்கா நேர அட்டவணையில் இவ் நேரஒதுக்கீடு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 
காலை 8.30 மணிமுதல் 11.30மணிவரை என்ற நேரசூசி இம்முறை காலை 8.30மணிமுதல் 11.40வரை என மாற்றப்பட்டுள்ளது.
 
 
 
இம்முறை க.பொ.த. சா.தரப்பரீட்சை டிசம்பர் 3ஆம் திகதி ஆரம்பமாகி 12ஆம் திகதி வரை ஒன்பது(9) தினங்கள் நடைபெற்று நிறைவடையும்.
 
 
 
 
தினமும் காலையில் 8.30மணிக்கு பரீட்சை ஆரம்பமாகும். பிற்பகலில் 1.00 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகும். ஆக டிசம்பர் 11ஆம் திகதி நடைபெறவிருக்கும் சித்திரப்பாட 2ஆம் பிரிவுக்கான பரீட்சை மாத்திரம்  1.15நிமிடத்திற்கு ஆரம்பமாகும்.
 
 
மேலதிக மேற்பார்வையாளர் கண்காணிப்பில்…
 
ஒவ்வொரு பரீட்சை நிலையத்திற்கும் மேலதிக மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். 
பரீட்சை நிலையத்தினுள் பரீட்சார்த்திகள் இலத்திரனியல் உபகரணங்களைக் கொண்டுவரஅனுமதிக்கக்கூடாது.நோக்குனர்களும் தொலைபேசி பாவிக்க்கூடாது. மேற்பார்வையாளர்கள் பரீட்சை விடயம் தொடர்பாக மட்டும் அமைதியாக தொடர்புகளை வைத்துக்கொள்ளமுடியும்.எந்தக்காரணம்கொண்டும் பரீட்சைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடாது.தேசிய அடையாளஅட்டையுடன் அங்கீகரிக்கப்பட்ட ஆளடையாள அட்டைகள் மூலம் உறுதிப்படுத்தப்படவேண்டும்.
 
இணைப்பாளர்கள் 12ஆம் திகதிவரை நிலையத்தினுள் இருக்கவேண்டும். எக்காரணம்கொண்டும் வெளியேறமுடியாது.
 
அண்மைக்காலமாக பரீட்சைத்திணைக்களம் பரீட்சையை நேர்த்தியாகவும் நம்பகமாகவும் இறுக்கமாகவும் செய்துவருவதையொட்டி சகலரும் பாராட்டுத்தெரிவிக்கின்றனர்