பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

0
576

மட்டக்களப்பு வவுண தீவு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த வேளையில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் நிரோஷன் இந்திக்க பிரசன்னவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன இறுதி மரியாதை செலுத்தினார்.

 

பூதவுடல் வைக்கப்பட்டுள்ள காலி உடுகம பிரதேசத்திலுள்ள அவரது வீட்டிற்கு இன்று (02) முற்பகல் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி உட்பட குடும்ப உறவினர்களுக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.