முனைக்காடு விவேகானந்தாவில் விழாக்கோலம்பூண்ட பரிசளிப்பு விழா.

0
688

மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் நேற்று (01) சனிக்கிழமை பரிசளிப்பு விழா இடம்பெற்றது.

இதன்போது பாடரீதியாக அதிகப்புள்ளிகளைப் பெற்றவர்கள், புலமை பரீட்சையில் பரீட்சையில்  சித்தியடைந்தவர்கள், மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்பெற்றவர்கள்,  க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், பல்கலைகழகம் சென்றவர்கள், இணைப்பாடவிதான செயற்பாடுகளில் தேசிய, மாகாண, மாவட்ட மட்டங்களில் வெற்றி பெற்றவர்கள் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


தேசிய ரீதியில் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்ட வேட்கை என்ற நாடகம் இங்கு ஆற்றுகை செய்யப்பட்டதுடன், மாணவர்களின் நடனநிகழ்வுகளும் இடம்பெற்றன. மேலும் தேசிய ரீதியில் முதலிடத்தினைப் பெற்ற நாடகத்தினை நெறியாழ்கை செய்த ஆசிரியர் இ.குகநாதன் வாழ்த்தி, கௌரவிக்கப்பட்டார்.

வித்தியாலயத்தின் அதிபர் மா.சத்தியநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், பழைய மாணவரும் பிரதேச செயலாளருமான ந.வில்வரெத்தினம், பிரதிக்கல்விப் பணிப்பாளர் க.ஹரிகரராஜ், பழையமாணவர்களான முன்னாள் வடக்குகிழக்கு மாகாண பிரதிக்கல்விப் பணிப்பாளர் சீ.வரதசீலன், உலக கனடிய பல்கலைக்கழக பிராந்திய அணித்தலைவர் ம.யோகேஸ்வரன், நுண்கலைத்துறை தலைவர் சு.சந்திரகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.