படைப்புழு தாக்கம் தொடர்பில் விளக்கமளிப்பு

0
869

சோளன் செய்கையில் பரவிவருகின்ற படைப்புழு தாக்கம் தொடர்பில் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கும் விழிப்புணர்வு கூட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை, குளுவினமடு பகுதிகளில் இன்று(27) இடம்பெற்றது.

விவசாய விரிவாக்கல் திணைக்களம், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து இவ்விழிப்புணர்வு கூட்டத்தினை நடாத்தியதுடன், விவசாயிகளுக்கு, படைப்புழு தாக்கத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்து, மற்றும் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள கையாளவேண்டிய வழிமுறை தொடர்பிலும் விளக்கமாக கூறப்பட்டதுடன், துண்டுப்பிரசுரங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

தெற்கு வலய விவசாயப் பணிப்பாளர் எஸ்.சிவஞானம் மற்றும் செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

சோளான் செய்கையை வேகமாக தாக்கி வருகின்ற படைப்புழு தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்விழிப்புணர்வுகள் நடாத்தபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.