4தினங்களாக அகற்றப்படாதிருந்த வைத்தியசாலைக் கழிவுகள் நேற்று அகற்றப்பட்டன!!

0
534
கடந்த 4 தினங்களாக அகற்றப்படாதிருந்த கல்முனை ஆதார வைத்தியசாலையின் குப்பைகள் கழிவுகள் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் முயற்சியையடுத்து இன்று  (26) திங்கட்கிழமை மாநகரசபையினரால் அகற்றப்பட்டன.
கடந்த 4தினங்களாக கல்முனை மாநகரசபை மேயரின் உத்தரவின்பேரில் வைத்தியசாலைக்கழிவுகள் அகற்றப்படவில்லையெனத் தெரியவந்ததையடுத்து த.தே.கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் உடனடியாக கல்முனை மாநகரசபை ஆணையாளர் அன்சாருடன் தொடர்புகொண்டு முறையிட்டார். அகற்றப்படாமைக்கான காரணம் பற்றி தெரியவில்லையென பதிலளித்த ஆணையாளர் குப்பைகளை திங்களன்று அகற்ற நடவடிக்கை எடுப்பதாகக்குறிப்பிட்டார்.
அதன’படி கல்முனை ஆதார வைத்தியசாலையில் அகற்றப்படாமலுள்ள குப்பைகள்  இன்று திங்கட்கிழமை  அகற்றப்படுமென கல்முனை மாநகரசபை ஆணையாளர் தன்னிடம்  உறுதியளித்தாக கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்திருந்தார்.
குப்பைகள் அகற்றப்படாமை தெடர்பில் வைத்தியசாலை நிருவாகம் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினர் விசனம் தெரிவித்ததாக உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உறுப்பினர் ராஜன் மேலும் தெரிவிக்கையில்.
கல்முனை ஆதார  வைத்தியசாலையில் குப்பைகள் கடந்த நான்கு நாட்களாக  அகற்றப்படாமல் இருந்ததால் வைத்தியசாலை சூழலில் பல சௌகரியங்கள் ஏற்பட்டது இது தொடர்பாக வைத்தியசாலை நிருவாகம் என்னிடம் தெரியப்படுத்தியிருந்தார்கள்.
இதேவேளை குப்பைகளை அகற்ற வேண்டாம்  என மேயர் கூறியதாக  குப்பை சேகரிப்பு  மேற்பார்வையாளர்  தெரிவித்திருந்தார். இந்நிலையில்  மேயருடன் பலமுறை தொடர்பை ஏற்படுத்தினேன் .அவரது தொடர்பு கிடைக்கவில்லை. பின்னர்   மாநகசபை ஆணையாளரை  தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது  திங்கட்கிழமை குப்பைகள்  அகற்றப்படும் எனவும் அதனை  அகற்றுமாறு மேயர்  தெரிவித்ததாகவும்    உறுப்பினர் ராஜன் தெரிவித்தார்.
 கல்முனை ஆதார வைத்தியசாலையில் நான்கு தினங்களாக கல்முனை மாநகரசபையால் குப்பைகள் அகற்றப்படாத நிலையில் கல்முனைகுடி மடுவத்தை ஆதாரவைத்தியசாலையிலும் மருதமுனை வைத்தியசாலையிலும் குப்பைகள் மாநகரசபை வண்டிகளில் சேகரிக்கப்பட்டதாகவும் இது மாநகரசபை மேயரின் மற்றுமொரு இனவிரோதசெயற்பாடு எனவும்  முகப்புத்தகங்களிலும் சில இணையத்தளங்களிலும்   காரசாரமாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்..