30 கோடிக்கு விலைபோன வியாழேந்திரன் வேண்டாம் – கவன ஈர்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

0
617

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன்  பிரதமர் மஹிந்த அணிக்குத் தாவி பிரதி அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டதைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை 04.11.2018 மட்டக்களப்பு நகரில் சுலோகங்கள் தாங்கிய வண்ணம் கவன ஈர்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு நகர காந்தி பூங்கா சதுக்கத்தின் முன்னால் இடம்பெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பான அரசியல் ஆர்வலர்கள், கலந்து கொண்டிருந்தனர்.

‘மட்டக்களப்பு மக்களின் மானத்தைப் போக்கிய அமல், விலைபோக எல்லோரும் வியாழேந்திரன் இல்லை, ஜனநாயகமா பண நாயகமா நாடாளுமன்றத்தை உடன் கூட்டு, 30 கோடிக்கு விலைபோன வியாழேந்திரன் வேண்டாம், ரணில் பக்கம் ஜனநாயகவாதிகள், மஹிந்த பக்கம் கொலைகாரர்கள், ஜனாதிபதியே ஜனநாயகத்தைக் காப்பாற்று’ என்பன உள்ளிட்ட இன்னும் பல வாசகங்களைத் தாங்கிய பதாதைகளுடன் எதிர்ப்பாளர்கள் நின்றிருந்தனர்.