சபாநாயகரிற்கு சம்பந்தன் கடிதம்

0
545

பாரளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா .சம்பந்தன் பாராளுமன்ற சபாநாயகர் கருஜெயசூரியவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்

சம்பந்தன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது.

 

நாடாளுமன்றத்தின் ஆதிபத்யத்தை நிலைநிறுத்தவேண்டியதன் அவசியத்தை அங்கீகரிப்பதை கருத்தில்கொண்டும்

மக்களால் ஜனநாயகரீதியில் தெரிவு செய்ய்ப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கியுள்ள பாராளுமன்றத்தில் ஆதிபத்யத்தை நிலைநிறுத்தவேண்டியதன் அவசியத்தை கருத்தில்கொண்டும்,பாராளுமன்றம் தனது சட்டபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதன் மூலம் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.