விஞ்ஞானப்போட்டியில் மாகாணத்தில் சாதித்த படுவான்கரை மாணவி

0
741

கிழக்கு மாகாணமட்ட விஞ்ஞானப்போட்டியில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மகிழவெட்டுவான் மகாவித்தியாலய மாணவி கே.நிலாகினி மூன்றாம் இடத்தினைப்பெற்று சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

தரம் – 9ல் கல்வி பயில்கின்ற குறித்த மாணவியே மாகாணத்தில் மூன்றாம் இடத்தினைப்பெற்றுள்ளார். வலய வரலாற்றில் முதன்முறையாக விஞ்ஞானப்போட்டியில் மாகாணமட்டத்தில் மூன்றாம் இடம் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மாணவி, கடந்த வருடம் நடைபெற்ற சமூகவிஞ்ஞானப்போட்டியில் தேசிய ரீதியாக தமிழ்மொழியில் முதலிடத்தினையும், ஏனைய மொழிகளுக்கிடையில் இரண்டாம் இடத்தினையும் பெற்று சாதித்திருந்தார்.