தேசியமட்ட ஆங்கிலப்போட்டியில் சாதனை படைத்த உன்னிச்சைப்பாடசாலை மாணவன்.

0
1311

தேசியமட்ட ஆங்கிலத் தினப்போட்டியில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட உன்னிச்சை 6ம்கட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ஜெ.துகிந்தரேஸ் தேசிய ரீதியாக மூன்றாம் இடத்தினைப் பெற்று வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளான்.
தேசிய ரீதியாக நடைபெற்ற நினைவுபடுத்தி ஒப்புவித்தல் போட்டியிலேயே குறித்த மாணவன் சாதனையை படைத்துள்ளான்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அதிகஸ்டப்பாடசாலையாகவும், வளங்கள் குறைவான பாடசாலையாகவும் குறித்த பாடசாலை உள்ளநிலையில், மட்டக்களப்பு நகர் பகுதியில் வசிக்கும் குடும்பத்தினைச் சேர்ந்த மாணவனே, 15கிலோமீற்றருக்கும் தொலைவில் உள்ள உன்னிச்சைப் பாடசாலையில் கல்வி கற்று இச்சாதனையை நிலைநாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக வலய வரலாற்றில் ஆங்கிலத் தினப்போட்டியில் தேசிய ரீதியில் சாதனைப்புரியப்பட்டுள்ளமையும் எடுத்துக்காட்டத்தக்கது.