கல்முனை மாநகரசபையில் எதிரொலித்த ஆலய பிரச்சினை

0
699
 
கல்முனை மாநகரசபை அமர்வில் எதிரொலித்த ஆலய விவகாரம்! சபையில் அமளிதுமளி: சபை இடைநடுவில் கலைந்நதது.!
காரைதீவு  நிருபர் சகா 
 
கல்முனை மாநகரசபையின்  மாதாந்த அமர்வு  (16} செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றவேளை  ஆலயவிவகாரம் அங்கு பலமாக எதிரொலித்தது.
 
 
எதிர்க்கட்சியைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மேயரை நோக்கி ஆலய வழக்கு தாக்கல் தொடர்பாக கேள்வி கேட்டதுடன் இந்த வழக்கை வாபஸ் பெறுமாறும் இது இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல் எனவும் கருத்துக்ளை முன்வைத்தனர் .
 
அப்போது சபையில் அமளிதுமளி ஏற்பட்டது. சபையை சீராகக்கொண்டுசெல்ல முயற்சி மேற்கொளள்ப்படடதாயினும் அது பலனளிக்கவில்லை. தொடர்ந்து கூச்சலும் குழப்பமும் நீடித்தது.
 
இதன்போது  மேயருக்கும் த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கிடையில் காரசாரமான விவாதம் ஏற்பட்டது.
 
மாநகரசபை மேயரான தாங்கள் இவ்விவகாரம் தொடர்பாக இந்தச்சபையில் தமிழ் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்குவருவோம்  என்ற சிந்தனையில்லாமல் நேரடியாக நீதிமன்றுக்கச்சென்தறது  ஏன்? என வினவினர். இது இனங்களிடையே ஒர முறுகல் நிலையை ஏற்படுத்தாதா? எனவும் கூறினர்.
வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதனால் இங்கு எதையும் கதைக்கமுடியாது என்று மேயர் பதிலளித்தார்.
 
இருந்தும் தொடர்ந்து தமிழ் உறுப்பினர்கள் தமது பலமான எதிர்ப்பை வெளிக்காட்டிக்கொண்டிருந்ததனால் சபையை இடைநடுவில் முடிவுறுத்திவிட்டு சென்றார் மேயர்.
 
 அதேவேளை கல்முனை மாநகரசபை ஆட்சிக்கு ஆதரவளித்துக்கொண்டிருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த பிரதிமேயர்  எதிர்ப்புகாட்டாது மௌனமாக இருந்ததாகவும் அதே அணியில் ஒருவர் த.தே.கூட்டமைப்பு அணியினருடன் இணைந்து செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.