வவுணதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வும் முதியோர் வாரமும்

0
688
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வும் முதியோர் வார நிகழ்வும் வியாழக்கிழமை 11.10.2018ஆம் திகதி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேசத்தில் சாதனை படைத்த மாணவர்களும், முதியோர்களும்  பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் அதிதிகளின் உரையும் இடம்பெற்றது.
இப் பாராட்டு நிகழ்வில், அண்மையில் வெளியான  தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்திலும் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று முதன் நிலைக்கு தெரிவான,  மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சை 6ம் கட்டை  பாடசாலை மாணவன் செல்வன் ஜெயராஜ் துஹின் ரறேஷ்க்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சண்முகராஜா, கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சோமசுந்தரம் மற்றும் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்டப் பணிப்பாளர் என பலர் கலந்து சிறப்பித்தனர்.