நாம் இனவாதம் பேசுகின்றோம் என்றால் பின்கதவால் வந்த அரவியல்வாதி பேசுவது என்ன.கேட்கின்றார் அமல் எம்.பி

0
738

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து தனியார் மற்றும் குடியிருப்புக் காணிகளை டிசம்பர் மாத இறுதிக்குள் விடுவிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஐயன்கேணி தமிழ் மகா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா திங்கட்கிழமை (08) நடைபெற்றது இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – மட்டக்களப்பு மாவட்டத்தில் முறக்கொட்டாஞ்சேனை, காயன்கேணி, குருக்கல்மடம் ஆகிய கிராமங்களில் பாடசாலைக் காணிகளும் பட்டிப்பளையில் ஆசிரியர் பயிற்சி கலாசாலை காணியும் பாதுகாப்புதரப்பினர்;வசம் உள்ளது. இதனையெல்லாம் டிசம்பர் மாத முடிவதற்குள் விடுவிக்கப்பட வேண்டும்.

எமது சமூகத்தின் விடுதலைக்காக தங்களை அர்ப்ணித்துச் சென்ற அரசியல்கைதி தற்போது உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள். அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் பல போராட்டங்களை வீதிகளில் இறங்கி முன்னெடுக்கின்றோம். இந்த நல்லாட்சி அரசாங்கம் எந்தவித நிபந்தனைகளுமின்றி கைதிகளை விடுவிக்க வேண்டும். மக்கள்விடுதலை முன்னணியினர் கடந்த காலங்களில் ஆயதமேந்தி போராடியவர்கள் அவர்கள் அனைவரும் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டார்கள் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியுமானால் ஏன் தமிழ் அரசியல் கைதிகளுக்க பொது மன்னப்பு வழங்க முடியாது.

பெரிய புல்லுமலையில் அமைக்கப்படும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலை என்பது ஒரு இனத்துக்கு ஒரு சமூகத்துக்குட்ட பிரச்சினை அல்ல அதை செயற்படுத்தும் கம்பனிக்கு எதிராகவே போராட்டம் நடைபெறுகிறது. நாங்கள் பல போராட்டங்களை முன்னெடுத்தோம் அதிலே முஸ்லிம் சிங்கள மக்களும் கலந்துகொண்டார்கள்.

இந்த போராட்டங்களை இந்த கம்பனியோடு சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் கம்பனி முதலாளி மார் இது இனத்துக்கு எதிரான போராட்டமாக காட்டி தப்பித்துக்கொள்ள முயல்கிறார்கள். இது முற்றிலும் தவறானது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியலில் பலவீனமடைந்துள்ளதால் தங்களின் அரசியலில் மீள் எழுச்சி பெறுவதற்காக புல்லுமலை தண்ணீர்த் தொழிற்சாலை விடயத்தைக் கையில் எடுத்துள்ளதாக மட்டக்களப்பு அரசியல்வாதியொருவர் பேசியுள்ளார். அவர் கடந்த தேர்தலில் தோல்வியடைந்து பின்கதவால் வந்தவர். நாங்கள் இனவாதம் பேசவில்லை எங்களுக்குரிய உரிமைகளையே கேட்கிறோம்.

கடந்த ஆட்சிக்காலத்தில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டன பன்றி இறைச்சிகள் வெட்டிப் போடப்பட்டன அந்த காலத்தில் பல முஸ்லிம் அரசியல்வாதிகள் வாய் திறக்காமல் அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்தார்கள். கடந்த காலத்தில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்ட போது நாட்டின் சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம்களுக்காக நாங்கள் பேசினோம் போராடினோம்.

ஆனால் தோர்தலில் தோல்வியடைந்து பின்கதவால் வந்த மட்டக்களப்பு அரசியல்வாதி ஓட்டமாவடியில் காளி கோவிலை உடைத்து மீன் சந்தையைக் கட்டினேன் என்கிறார். நாங்கள் இனவாதம் பேசுகின்றோம் என்றால் அவர்பேசுவது என்ன?

ஒரு இனம் இன்னோரு இனத்தினைப் பாதிக்காமல் நடந்துகொள்வதுதான் உண்மையான நல்லிணக்கம். வெள்ளையர்கள் கறுப்பு இன மக்களுக்கு செய்த அநீதிகளை மன்னிக்க முடியும் மறக்க முடியாது என மறைந்த ஜனாதிபதி நெல்சன் மண்டேலா கூறினார் அந்த அடிப்படையில் நீங்கள் நடந்துகொள்ள வேண்டும் எனறார்.