ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வார நிகழ்வு (படங்கள் இணைப்பு)

0
1239

 

ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வார நிகழ்வு 08.10.2018 அன்று செங்கலடி சௌபாக்யா மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் நல்லையா வில்வரத்னம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் நிகழ்வின் கதாநாயகர்களாக கலந்து சிறப்பித்ததுடன் அவர்களது பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந் மற்றும் சிறப்பு அதிதிகளாக உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன், உதவி பிரதேச செயலாளர் திருமதி.ந.முகுந்தன் ஆகியோரும் கௌரவ அதிதியாக வேள்ட் விஷன் நிறுவன திட்ட முகாமையாளர் பியோ யூட், சிறுவர் உரிமைகள் மற்றும் பெண்கள் அபிவிருத்திப் பிரிவுகளின் மாவட்ட இணைப்பாளர்கள், மாவட்ட முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திப் பிரிவும், சமூக சேவைகள் பிரிவும் இணைந்து நடாத்திய இந்நிகழ்விற்கான அனுசரணையினை வேள்ட் விஷன் நிறுவனம், முதியோர்களுக்கான தேசிய செயலகம் மற்றும் பிரதேச நலன் விரும்பிகளும் வழங்கியிருந்ததுடன் நிகழ்விற்காக அழைக்கப்பட்டிருந்த அனைத்து முதியோர்கள் மற்றும் சிறுவர்களுக்கும் பெறுமதிமிக்க பரிசுப் பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டது.