தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.வீ.ஆனந்தசங்கரி

0
494

உண்ணாவிரதத்தினை மேற்கொண்டுள்ள அரசியல் கைதிகளின் விடயத்தில் இனியும் காலம் தாழ்த்தாது உடன் நடவடிக்கை எடுக்காவிடின் நிலைமை மிக மோசமாகிவிடும். இதனை கருத்திற் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான முழுப் பொறுப்பையும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தாங்கள்தான் என தம்பட்டம் அடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஏற்க வேண்டும். ஏன தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆவ்அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இரண்டு முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் எதுவித பலனும் கிடைக்கவில்லை. உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில், அரசுக்கு இனியும் கால அவகாசம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அரசுக்கு அழுத்தத்தைக் கொடுத்து உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. தாங்கள்தான் இந்த நல்லாட்சியை அமைப்பதற்கு காரணம் என வாய்ச்சொல் வீரம் பேசும் பேசினால் மட்டும் போதாது அதனை செயலிலும் காட்டவேண்டும்.
இந்த நல்லாட்சியை பாதுகாப்பதற்கு, எதிர்க் கட்சியாக இருந்தும் வரவு செலவு திட்டத்தை, ஆதரித்து வாக்களித்தார்கள் தற்போது அரசியல் கைதிகளின் உயிரை பாதுபாப்பதற்கு என்ன செய்யப் போகின்றார்கள். அரசுக்கு கொடுக்க வேண்டிய அழுத்தத்தை உரிய முறையில் கொடுத்து இந்த உயிர்களை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
தற்காலிகமாக என்ற போர்வையில் கொண்டுவரப்பட்ட, பயங்கரவாத தடைச்சட்டம் இன்றும் நீடிக்கின்றது. அந்த சட்டத்தில் இருக்கின்ற சரத்துக்களின் படி துரிதமாக விசாரணை செய்திருந்தாலே அவர்கள் அனைவரும் தண்டனையை முடித்து வெளியேறி இருப்பார்கள். சிறையில் தண்டனை பெற்று இருந்தாலும் அவர்களின் நன்னடத்தையை கருத்திற் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அவர்கள் விடுமுiறையில் வீடு சென்று வருவதற்கு கூட அந்த சட்டத்தில் இடம் இருக்கின்றது. இவை அனைத்தும் ஜனாதிபதி சட்டத்தரணி கௌரவ சுமந்திரன் அவர்களுக்கு தெரியாதா? ஏன் இப்படி நாடகம் ஆடிக்கொண்டிருக்கின்றார்கள்.
எனவே இவைகளை எல்லாம் ஜனாதிபதி அவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களை உடனடியாக பொது மன்னிப்புடன் கூடிய விடுதலையோ அல்லது புனர்வாழ்வுடன் கூடிய விடுதலையோ பெற்றுக் கொடுத்து, இனியும் காலம் தாழ்த்தாது அந்த உயிர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தது. ஏன அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.