நெடுஞ்செழியன் மலேசியா பயணம்

0
643

 

கிழக்கு மாகாண முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் மலேசியா பயணம.
கிழக்கு மாகாண முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் மலேசியா நாட்டின் அபிவிருத்தி அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு  6ஆம் திகதி மலேசியா பணயணமானார்.
ஆர்.நெடுஞ்செழியனின் பயணத்துக்காக ஒழுங்குகளை இலங்கை அபிவிருத்தி நிறுவகம் மேற்கொண்டுள்ளது.
இப் பயணம் இலங்கை திட்டமில் சேவையின் முதலாம் தர உத்தியோகத்தர்களுக்காக திறமை விருத்தியை நோக்காகக் கொண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திறந்த போட்டிப் பரீட்சையின் மூலம் 1994 இல் இலங்கை திட்டமிடல் சேவையில் இணைந்து கொண்ட ஆர்.நெடுஞ்செழியன் கொள்கை திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சு,  சமுர்த்தி அமைச்சு ஆகியவற்றில் கடமையாற்றி 2006 இல்  இலங்கை திட்டமிடல் சேவையில் முதலாம் தரத்தைப் பெற்றுக் கொண்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக பொதுச்சேவை ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்டார்.
திட்டமிடல் சேவையில் முதலாம் தரத்ததில் 13 வருட சேவைக்காலத்தை பூர்த்திசெய்த இவர் திட்டமிடல் சேவை விசேட தரத்திற்கான நேர்முகப் பரீட்சையை 2012 இல் பூர்த்திசெய்து விசேட தரத்தை எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் சிறப்புப்பட்டம் பெற்று  3 வருடங்கள் உதவி விரிவுரையாளராக (பொருளியல்) யாழ். பல்கலைக்கழகத்தில் கடமையாற்றியதுடன் தனது பட்டபின் படிப்பு டிப்ளோமாவை(அபிவிருத்தி திட்டமிடல்) கொழும்பு பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டதுடன் தனது முதுமாணிப் பட்டபடிப்பையும் (பொருளியல்) பூர்த்திசெய்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக பீட முகாமைத்துவ சபையில் அங்கத்தவராகவும், கலை கலாச்சார பீட கணக்காய்வு குழுவின் தலைவராகவும் கடமையாற்றி வருகின்றார். மேலும் கொரியா, தாய்லாந்து, இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன் றநாடுகட்கு சென்று பிரதேச திட்டமிடல் தொடர்பான விசேட பயிற்சிகளை பெற்றுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக கடந்த பல வருடங்களாக  கடமையாற்றிய இரா.நெடுஞ்செழியன் கிழக்கு மாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கமைய கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக கௌரவ முதலமைச்சர் செயலகத்திற்கு இவ்வருட ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.