மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் 23பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்.

0
622

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்டத்தில், வெளியாகியுள்ள தரம் – 5புலமைப்பரிசில் பரீட்சையில் 23மாணவர்கள் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
இதில் அம்பிளாந்துறை பாடசாலை மாணவர் ஒருவரே கோட்டத்தில் அதிகூடிய புள்ளியான 182புள்ளியினைப் பெற்றுள்ளார்.

அம்பிளாந்துறைப் பாடசாலையில் 5மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதுடன் முனைக்காடு விவேகானந்தா, மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயங்களின் மாணவர்கள் நால்வர் வீதம் வெட்டுப்புள்ளிகளுக்கு மேலும், அரசடித்தீவு விக்னேஸ்வரா, முனைக்காடு சாரதா, பண்டாரியாவெளி நாமகள் வித்தியாலயங்களில்; இரு மாணவர்கள் வீதமும், கடுக்காமுனை, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, விடுதிக்கல் ஆகிய பாடசாலைகளில் ஒரு மாணவர் வீதமும் புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்;ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
மேலும், மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் 70புள்ளிகளுக்கு மேல்பெற்று 100வீத சித்திபெற்ற பாடசாலைகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.