பிள்ளையான் புலிகளை ஒழிக்க உதவியமையினால்தான் அவரை சந்திக்கின்றோம். நாமல் ராஜபக்ச

பிள்ளையான்  புலியாக இருந்து பின்னர் நாட்டில்  புலிப்பயங்கரவாதத்தைஒழிக்க உதவிகளை வழங்கியவர். இருப்பினும் நல்லாட்சி அரசாங்கம் அவரை 3 வருடங்களாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளது.இருப்பினும் நாட்டில் இடம்பெற்ற  புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியை பெற்றுக்கொடுப்பதற்கு முழு ஆதரவினையும் வழங்கியமையால் தான் அவரை நேரில் சென்று சந்திக்கின்றோம் எனநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மட்டக்களப்பில் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேரில் சென்று நேற்று  (சனிக்கிழமை) சந்தித்து பின்பு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் கட்சி அங்கத்தவர்களையும் சந்தித்து உரையாடியுள்ளார்.

இவ் உரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.