மாந்தீவு சித்திர வேலாயுத சுவாமி ஆலயம் விஷமிகளால் உடைத்து கொள்ளை

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்ப்பட்ட மாந்தீவு சித்திர வேலாயுத சுவாமி ஆலயம் இன்று அதிகாலை விஷமிகளால் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது.ஆலயத்துக்குள் உடைத்து புகுந்த விஷமிகள் சுமார் 2 பவுன் மதிக்கத் தக்க வேல் ஒன்றையும் உண்டியலில் இருந்த பணத்தினையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

116 வருடம் பழ மை வாய்ந்த  மாந்தீவு  ஆலயத்தில் இதுவரைக்கும் இவ்வாறான சம்பவம் எதுவுமே நடைபெறாத நிலையில் இவ்வாறான சம்பவமொன்று நடைபெற்றுள்ளதாகவும் , சம்பவத்துடன் தொடர்புள்ளவர்கள் என சந்தேகிக்கப்படும் சில நபர்களை பொதுமக்கள் பொலிஸாருக்கு இனம் காட்டியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.