சாத்வீக வழியில் போராடி தனது உயிரை இனத்திற்காக மாய்த்துக் கொண்ட வரலாறு .பா.அரியநேத்திரன்

தனது இனத்திற்காக ஆயுதமேந்தி போராடிய இளைஞன் சாத்வீக வழியில் போராடி தனது உயிரை இனத்திற்காக மாய்த்துக் கொண்ட வரலாறு எமது ஈழத்தமிழருக்கு மாத்திரமே உரித்தானது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தியாகதீபம் திலிபனின் 31 அது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கோவிற்போரதீவு உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் ஜனநாயகிகள் போராளிகள் அமைப்பும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் இணைந்து நடாத்தியிருந்தனர். இந் நிகழ்வில் கலந்து கொண்டு  உரையாற்றுகையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தியாகி திலிபன் அவர்கள் யாழ் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகிய மாணவன் ஆவர் இவர் அப்போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் போராட்டத்தில் அரசியல் துறையில் காணப்பட்டார்.
இக்கால கட்டத்தில் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சார்த்து இடப்பட்டபோது  பாராளுமன்றத்தல் 13 வது சீர்திருத்தமான மாகாண சபை அதிகாரங்களை வழங்குவது சம்பந்தமான சீர்திருத்தம் வருகின்றது. ஆனால் மாகாண சபை அதிகாரங்கள் தமிழ் மக்களாகியஎங்களுக்கு போதாதென்பது அப்போதிருந்த தமிழ் அரசியல்வாதிகளினதும், விடுதலைப்புலிகளினதும் நிலைப்பாடாக இருந்துவருகின்றது.
இலங்கை இந்திய ஒப்பந்த்தின்படி தமிழ் மக்களுக்குரிய பாதுகாப்பை இந்திய அமைதி காக்கும் படைவழங்கும் என்று கூறி ராஜுகாந்தி அவர்கள் இப்படையினை இலங்கைக்கு அனுப்பிவைக்கின்றார். இப்படை வடகிழக்கு தமிழ் மக்களின்  பாதுகாப்புக்கு துணையாக இருக்கும் என்பதனை தமிழ் மக்கள் உறுதியாக நம்பியிருந்தனர். ஆனால் இதற்கு மாறான செயற்பாடையே அவர்கள் இராணுவத்தினருடன் சேர்ந்து மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில்தான் தியாகி திலிபன் அவர்கள் இந்திளாவின் கவனத்தை திருப்புவதற்காக இவர்களிடம் இருந்து எமது மக்களை மீட்டெடுப்பதற்காக ஐந்து அம்ச கோரிக்கைகளை முவைத்து தனது உண்ணாவிரத போராட்த்தினை ஆரம்பித்திருந்தார். இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக இதனை இவர் செய்யவில்லை.
இவ்வாறானதொரு சாத்வீக போராட்டமத்தினை ஏன்அவர் மேற்கொண்டிருந்தார் என்றால் இந்திய காந்தியத்தை அல்லது சாத்வீக போராட்டத்னை மதிக்கின்ற நாடு என்ற நம்பிக்கையின் அடிப்படையிலையே  இதனை மேற் கொண்டிருந்தார். ஆனால் அவரால் முன்வைக்கப்பட்டிருந்து அந்த ஐந்து அம்ச கோரிக்கையானது இலகுவானதொன்றாகும் இருந்தும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் ஆப்போதிருந்த நெருக்கமான அன்னியொன்ய உறவுகாரணமாக அக்கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்க மறுத்தது.
 சிறுவயதில் ஆயுதமேந்திய போர் வீரனாக இருந்து தனது இனத்திற்காக சாத்வீக வழியில் போராடி நீரைக்கூட அருந்தாது தனது உயிரை மாய்த்துக்கொண்ட ஒரேயொரு வீரன்தான் திலிபன்தான் இந்த வரலாறு ஈழத்தமிழருக்கே உருத்தானது இதனை நாங்கள் நினைவு கூராமல் இருக்கமுடியாது தமிழ் மக்களாகிய நாங்கள் இந்த இளைஞனின் உணர்வுக்கு மதிப்பளிக்கவேண்டும். இவனின் போராட்டமென்பது மாகாத்மா காந்திக்கும் ஒருபடி மேலானது என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
எங்களை பொறுத்தமட்டில் பல படுகொலைகள் எமது மண்ணில் நடந்தேறியுள்ளது இதனை யார் மேற்கொண்டனர் எதற்காக மேற்கொண்டனர் என்பது பற்றி சிந்திக்கவேண்டும். இவைகள் அனைத்திற்கும் ஒர வரலாறு உண்டு இந்த வரலாறுகளை நாங்கள் நினைவு கூரவேண்டும். அவ்வார் நினைவு கூர்வதன் ஊடாகவே நாங்கள் எதனை அடைவதற்காக இருக்கின்றோம் என்ற செய்தி சம்பந்தப்பட்டவர்களை சென்றடையும். நாங்கள் எமது மக்களுக்கு எவற்றை பெற்றுக் கொள்வதற்காக செயற்பட்டு வருகின்றோம் பாலத்திற்காகவா? அல்லது வீதிக்காகவா? அல்லது கட்டடங்களுக்கா? ஏவற்றிக்hக நாங்கள் அன்று தொடக்கம் இன்றுவரை நாங்கள் செயற்பட்டுவருகின்றோம் என்பதனை இந்த வரலாற்று சம்பவங்கள் எடுத்துக்காட்டி நிற்கின்றது. இவ்வாறான நிகழ்வுகளை நாங்கள் ஒருபோதும் மறந்து செயற்படமுடியாதுஅவர் இதன்போது  தெரிவித்தார்…பழுகாமம் நிருபர்